எங்கள் தூரநோக்கு
நல்லாட்சி மூலமான சிறந்த நுகர்வோர் சேவையை வழங்குதல்
எங்கள் இலட்சியநோக்கு
மக்களின் வாழ்க்கை தரத்தை அரசின் கொள்கை மூலம் திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சேவையினூடாக வள ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் பங்களிப்புடன் உயர்த்துதல்.
முழு அடங்கும் பகுதி 105.5 சது.கி.மீ
கிராம நிலதாரி பிரிவு எண் 20
சனத்தொகை 24241
பதுளைக்கு அண்மையிலுள்ள நகரிற்கான தூரம் 22 கி.மீ
இலங்கையில் மத்திய கிழக்கில் பதுளை மாவட்டத்தில் பிரதேச செயலகம் அமைந்துள்ளது. ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளன. அதில் மீகஹகிவுல பிரதேச செயலகமும் ஒன்றாகும். பதுளை மாவட்டத்திலே காணப்படும் மிகச் சிறிய பிரதேச செயலக அமைவிடம் இதுவாகும். இப் பிரதேசம் 105.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் முழு நிலப் பரப்பளவு 3.7% ஆகும். இப் பிரதேசத்தில் 20 கிராம அலுவலக பிரிவு காணப்படுகின்றது.
மீகஹகிவுல பிரதேச செயலக அமைவிடத்தை நோக்குவோமாயின் வடக்கில் சொரணாதொட பிரதேச செயலகமும் கிழக்கில் லுணுகல மற்றும் பஸ்ஸர பிரதேச செயலகமும் மேற்கில் கந்தகெட்டிய பிரதேச செயலகமும் அமைந்துள்ளது.
புவியியல் ரீதியாக அடையாலபடுத்துவோமாயின் சமவெலி மற்றும் மலைத்தொடர் கலந்த பௌதிக சூழல் காணப்படுகின்றது. சிறிய நகரம் என்றாலும் சில கிராமங்கள் பரந்தவையாகவும் மிகவும் தொலைவிலும் உள்ளன. பதுளை மற்றும் மஹியங்கனை போன்ற நகரங்களும் காணப்படுகின்றது. மீகஹகிவுல பிரதேச செயலகத்தில் இருந்து பதுளைக்கு 23 கிலோமீற்றரும் மஹியங்கனைக்கு 36 கிலோமீற்றரும் காணப்படுகின்றது.
















